எஞ்சப்போவது ஒன்றுமில்லை!
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பா (ஐந்தாம் மண்டலம்) எனும் நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சில…
- ஒருவன், தன்னை எத்துணை மகிமைப்படுத்திக் கொள்ளினும் மனிதன் மனிதனேயாவான்.
- விருப்பு வெறுப்புகளாலாகிய மனம் தானாக அடங்க அமைதி தேவை.
- நல்லோர் உள்ளமும் பொறாமையால் கெடும்.
- கடவுள் சொரூபத்தைத் தரிசித்தல் என்பது தன்னை தரிசித்தால் (முழுமையாக உணர்தல்) அன்றி கூடாது.
- செல்வர் என்பவர், காலச் சக்கர கதிப்படி வந்து போகும் செல்வம் உடையவர். நான், எனது எனும் செருக்கு இல்லா நல் வழியில் செல்பவரும் செல்வரே.
- வாழ்வின் இறுதியில் எஞ்சுவது ஒன்றுமின்று என்பதை உணர வேண்டும்.
- வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் – வேதம்
வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் – குரு
ஒரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் – தியானம்02.02.2021 04 : 59 P.M.