தவெக அரசு பற்றி சீமானின் விமர்சனம்!

செய்தி:   

திமுக போலவே தவெகவும் விளம்பர அரசுதான்!

– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 

கோவிந்த் கமெண்ட்: 

இன்றைக்கு தவெக அரசைப் பற்றி பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான்தான், தேர்தலுக்கு முன்பு வரை திமுகவை உள்ளுர் மொழியில் சொன்னால், கழுவி ஊற்றாத குறையாகப் பேசினார்.

நாகூர் ஹனிபா பாடலை சற்றே மாற்றி கலைஞரைப் பற்றி படு தீவிரமாக பேசினார். தேர்தல் முடிந்தபிறகு அதே திமுகவைப் புகழ்ந்தும் பேசியிருக்கிறார்.

அதேமாதிரியே தவெக அரசைப் பற்றி குறைகூறிக் கொண்டேயிருக்கிறார். அவரது அரசியலில்தான் எத்தனை முரண்கள்?

You might also like