ஊர் சுற்றிக் குறிப்புகள்:
எல்நினோ தட்பவெப்ப மாற்றம் இப்படியெல்லாம் மாறுதலை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை.
ஆனால், நம்மைச் சுற்றி பல மாற்றங்கள் விசித்திரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
முன்பு எப்போதும் இல்லாத விதத்தில், யானைகள் சர்வசாதாரணமாக நடந்து போகின்றன.
சென்றவாரம் மலைப்பகுதியில் டூரிஸ்ட்களை பீதியடையவைத்தபடி அதற்கே உரிய இயல்போடு, புலி ஒன்று கடந்து போயிருக்கிறது.
மலையோரத்தில் வசிப்போரின் வீடுகளில் தேள்கள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கின்றன.
தெருவில் திரியும் நாய்கள் திடீர் திடீரென்று சுறுசுறுப்பாகி மெதுவாக நடந்துபோகிறவர்களெல்லாம், பதற வைத்து மிரட்டுகின்றன. கடிக்கவும் செய்கின்றன.
இவற்றையெல்லாம், நாய்க்கடி படாத சவுகர்யமான தூரத்தில் நின்று சிலர் செல்ஃபோனில் படம்பிடித்து ரீல்ஸ்களிலும் ஒலிபரப்பி லைக் வாங்குகிறார்கள்.
சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சுற்றித்திரியும் பூனைகள் இதுவரை இல்லாத அளவுக்கு தொண்டை கமறிய மாதிரி குரல் கொடுக்கின்றன.
பல வீடுகளில் வீட்டின் மேற்கூரையில் பெரிய அளவிலான பல்லிகள் தலைகீழாக வாக்கிங் போவதை கலவரத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஜந்துக்களிடம்தான் இப்படிப்பட்ட நிலைகள் என்றால், வீட்டிற்குள்ளும் இதன் எபெஃக்டை காண முடிகிறது.
பலவீடுகளில் வெப்பத்தைப் பொறுக்காமல் கழிவுநீர் குழாய் வழியாகவோ, வாஷ்பேசனுக்குள்ளோ, குளியலறையில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்கள் வழியாகவோ வகைவகையான பூச்சிகள் வெளிப்பட்டு புது விருந்தாளிகளைப்போல வீட்டிற்குள் பரவுகின்றன.
பற்றாக்குறைக்கு சிறியதும் பெரியதுமாக விதவிதமான பூரான்கள் வீட்டிற்குள் முன்பில்லாதபடி வெளிப்பட்டு, வீட்டிலுள்ள குழந்தைகளை அலற வைக்கின்றன.
வீட்டில் தரையில் படுத்து உறங்குகிறவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.
அப்படிப்பட்ட கவனம் இல்லையென்றால் எந்த பூச்சிக்கும் அவர்கள் வழிப்போக்கியாக மாறலாம்.
எல் நினோவினால், உடம்பில் வியர்க்குருக்கள் தான் அதிகரித்திருக்கின்றது என்று பார்த்தால், கூடவே ஜீவராசிகள் தரப்பில் எதை எதையெல்லாம் பயம் படற எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
– காவ்யா
#எல்நினோ #தட்பவெப்பமாற்றம் #யானை #மலைப்பகுதி #டூரிஸ்ட் #நாய் #நாய்க்கடி #பூனை #ஜந்து #குளியலறை #பூரான் #ஜீவராசி #ElNino #ClimateChange #Elephant #HillStation #Tourist #Dog #DogBite #Cat #Animal #Bathroom #Centipede #LivingCreatures
