அதிமுக துவக்க நாளில் தொண்டர்களுக்கு ஒரு செய்தி!

அக்டோபர் 17 – அதிமுக என்கின்ற மகத்தான பொன்விழா கண்ட இயக்கம் துவக்கப்பட்ட நாள்.
 
இதே நாளில் மிக எளிமையாக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் துவக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்.
 
அவர் நம் நினைவுகளில் ஐக்கியமாகி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனாலும் இன்னும் அவரைப் பற்றிய நினைவு மட்டும் பலரிடம் உயிரோட்டமாக இருக்கிறது.
 
அதிமுக என்கின்ற இயக்கத்தை நிறுவிய எம்.ஜி.ஆரைப் பற்றிய மிக அபூர்வமான ஆவணம் உருவாக்கப்பட்டு அழகான வடிவமைப்பில் நூலாக வெளிவந்திருப்பது அதிமுக தொண்டர்கள் எவ்வளவு பேருக்கு தெரியும்?
 
இலங்கை கண்டியில் அவர் பிறந்தது முதல் சென்னை மெரினாவில் அவர் உடல் விதைக்கப்பட்டது வரை அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் விரிவாகச் சொல்கிறது இந்த நூல்.
 
சதிலீலாவதி என்கின்ற அவருடைய முதல் திரைப்படத்திலிருந்து கடைசி திரைப்படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் வரை ஒவ்வொரு திரைப்படம் குறித்த தகவல்கள் வண்ண படங்களுடன் இந்நூலில் அழகுற பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
 
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இடம்பெற்ற பல முத்தான வசனங்கள், இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
 
குறிப்பாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் இடம் பெற்ற, “என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, என்னை நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை” என்பது மாதிரி பல பளிச்சென்ற வசனங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
 
அதுபோலவே ‘அச்சம் என்பது மடமையடா’வில் துவங்கி, ‘உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்’ என்கின்ற அவருடைய படங்களில் இடம்பெற்று பெரும் புகழை பெற்ற திரைப்பட பாடல்களும் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
 
இதையெல்லாம் விட சிறப்பாக எம்ஜிஆர் அவர்களே எழுதிய கட்டுரைகளும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர் அளித்த பேட்டிகளும் இதற்கு முறை மூடம் வைத்தார் போல் அதிமுக என்கின்ற இயக்கத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்களில் முதல்வராகி சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை உட்பட அனைத்துமே தொகுத்து அளிக்கப்பட்டிருக்கின்றன.
 
இத்துடன், இன்னும் சிறப்பாக, எம்.ஜி.ஆருடன் திரைவாழ்வில் பங்கேற்றவர்கள், அரசியல் வாழ்வில் பங்கேற்றவர்கள் என்று அனைவருமே அவருடனான அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார்.
 
ஏறத்தாழ 800 பக்கங்களில் முழுக்க வண்ணமயமாக உருவாக்கப்பட்டிருக்கிற இந்த நூல் எம்.ஜி.ஆரைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு அரியதொரு பொக்கிஷம்.
 
மிகச்சிறப்பாக வெளியிடப்பட்ட இந்த நூல், இன்னும் குறிப்பிட்ட பிரதிகளே எஞ்சி இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆருடைய வாழ்வின் ஒரு பகுதியாக இருந்த சென்னை, ஆற்காடு சாலையில் உள்ள அவருடைய நினைவில்லத்தில் சலுகை விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
 
உலகளாவில் பறந்து விரிந்திருக்கிற எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இந்த நூலை அழகுற பதிப்பித்திருக்கிற மெரினா புக்ஸ் நிறுவனத்தை அணுகினால் நூலைப் பெற முடியும்.
 
இதையெல்லாம்விட இந்த நூலுக்கு கிடைத்திருக்கிற தனிச்சிறப்பு,  இந்த நூலை தொகுத்து, எழுதியவர் எம்.ஜி.ஆரின் வாரிசான அவருடைய பேரன் முனைவர் குமார் ராஜேந்திரன்.
 
அவருடைய மேலான உழைப்பின் பலனாக உருவாகியிருக்கும் இந்த நூலை படிப்பது அதிமுக என்கின்ற இயக்கம் உருவான வரலாற்றை இன்றைய தலைமுறைக்குத் தெளிவாகச் சொல்லும்.
 
சென்னை, ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவில்லத்தில் இதை நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்.
 
நூல் பற்றிய மேலும் தகவல்களுக்கு…
அலைபேசி: 88834 88866 / 75400 09515
மின்னஞ்சல்: contactus@marinabooks.com
vels
You might also like