கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!

வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,
வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,
சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

– கவியரசு கண்ணதாசன்

பி.கு : கர்மவீரர் காமராஜரைப்பற்றி கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதை.

நிகழ்ச்சி ஒன்றில் பெருந்தலைவர் காமராஜரிடம் நினைவுப் பரிசை பெற்றுக்கொள்ளும் கவியரசர் கண்ணதாசன்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like