செய்தி:
திமுக பாணியை தவெகவும் பின்பற்றுகிறது; வேளாண்மை பட்ஜெட்க்கு ‘மைனஸ் பூஜ்ஜியம்’ மதிப்பெண்!
– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுக எம்எல்ஏ-க்களைத்தான் கண்காணித்து கணக்கெடுக்கிறார் என்று பார்த்தால், எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டையெல்லாம் கண்காணித்து அதற்கு மதிப்பெண்ணும் கொடுக்கிறார்.
முதல்நாள் பட்ஜெட்டுக்கு திமுக பூஜ்ஜியம் மதிப்புக் கொடுத்தால் மறுநாள் எடப்பாடியும் அதே பாணியில் பூஜ்ஜியம் மதிப்பு கொடுக்கிறார்.
எப்பேர்ப்பட்ட கணக்கு வாத்தியார்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள்.