செய்தி:
சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு!
– ஜோதிமணி எம்.பி. பகிரங்க குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
கரூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யான ஜோதிமணி இப்போது மட்டுமல்ல, தேர்தல் நடப்பதற்கு முன்பே காங்கிரஸ் தலைமை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே இதே குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை தேர்தல் முடிந்ததும் தன்னுடைய கட்சித் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாகவே சொன்னார்.
அப்போது செல்வப் பெருந்தகை சொன்ன சொல்லை அவர் நிறைவேற்றாத நிலையில்தான் ஜோதிமணி எம்.பி. மறுபடியும் தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.