மதுக்கடைகளை மூடுவதற்குள் இப்படி ஒரு பின்விளைவு!

செய்தி:

டாஸ்மாக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும்: பார் கட்டிட உரிமையாளர்கள் போராட்டம். 

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள், மாணவர்களும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் வலுத்ததால்தான் தற்போது தமிழகத்தில் முதற்கட்டமாக 717 மதுபானக்கடைகளை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு.

இவ்வளவு கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு வெளிவந்ததும், அந்தக் கடைகளைச் சுற்றி இருக்கிற ஏராளமான பொதுமக்கள் இந்த முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படிப் பாராட்டுத் தெரிவிப்பதை எதிர்தரப்பினர் சுலபமாக ஏற்றுக்கொள்வார்களா என்ன?

அவர்களின் குரல்தான் பார் கட்டிட உரிமையாளர்களின் குரலாக வெளிப்படுகின்றது.

You might also like