வரவேற்கும் பாஜகதான் விளக்கம் சொல்ல வேண்டும்!

செய்தி:

ஆம் ஆத்மியிலிருந்து ஏழு எம்.பி.க்கள் இணைந்ததால், மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு.

இந்தியா கூட்டணிக்கு விடைகொடுத்த அந்த ஏழு எம்பிக்களையும் வரவேற்கிறேன்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜீஜு.

கோவிந்த் கமெண்ட்:

பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான மோதல், ஒரு தொடர்கதையைப் போல ஆகிவிட்டது.

அதனுடைய ஒரு பகுதியாகத்தான் தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களைவை எம்பிக்களை ஒரே நேரத்தில் பாஜக தன் பக்கம் இழுத்து, மாநிலங்களவையில் தன்னுடைய எண்ணிக்கையைக் கூட்டியிருக்கிறது.

அதற்கேற்ப தங்களிடம் வந்து சேர்ந்த ஆம் ஆத்மி எம்.பி.க்களை பாஜக வெகுவாக வரவேற்றிருக்கிறது.

இதெல்லாம் இப்படி 7 எம்பிக்கள் சேர்வதெல்லாம் ஏதோ பாஜகவின் மீதான ஈர்ப்பின் காரணமாக மட்டும்தான், இது நடந்தேறியிருக்கிறதா என்பதை அதை வரவேற்றிருக்கிற பாஜக தான் விளக்க வேண்டும்.

You might also like