செய்தி:
சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் நம் பக்கம்தான் வருவார்!
– மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுவராஸ்யம்.
கோவிந்த் கமெண்ட்:
தவெக தலைவரான விஜய்க்குத் தங்களால் முடிந்த அளவுக்கு என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தது மத்தியிலுள்ள பாஜக ஆட்சி.
விசாரணை என்கிற பெயரில் டெல்லிக்கு அடிக்கடி விஜய்யைப் படையெடுக்க வைத்தார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தொடர்ந்து சிக்கலான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
அத்துடன் மட்டுமல்லாமல் விஜய்யின் வருமான வரி கணக்கையெல்லாம், தேர்தல் சமயத்தில் தோண்டியெடுத்து மீடியாவில் பரவச் செய்திருக்கிறார்கள.
இத்தனையையும் செய்துவிட்டு, தற்போது விஜய் தனித்து எந்தக் கூட்டணியின் பின்புலமும் இல்லாமல் நிற்கும் நிலையில் இப்படிப் பேசுவது மத்தியமைச்சருக்கே ‘காமெடி’யாகத் தெரியவில்லையா?