செய்தி:
ஈரானிடமிருந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா!
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போர் முற்றி வரும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான பற்றாக்குறை அதிகரித்து, விலையேற்றமும் அதிகரித்து, பல்வேறு பொருளாதார திண்டாட்டங்களை பல நாடுகள் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் தருவித்திருக்கிறது இந்திய அரசு.
ஆனால், கச்சா எண்ணெயை நமது தேவைக்கு நாம் வாங்குகையில் இடையில் ஏன் இந்த 7 ஆண்டுகளுக்கு மேலான தாமதம்?
இத்தகைய தாமதத்தை உருவாக்கியவர்கள் யார்?