செய்தி:
2026-27 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை!
- சிபிஎஸ்இ அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசு மொழிப் பிரச்சனையை தவறாக அணுகியதால்தான், தமிழகத்தில் அடுத்தடுத்து மொழிப் போராட்டம் நடந்திருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின்படி, ஒரு மாணவன் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அப்படியொரு மொழித் திணிப்பு முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டால் தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப் போராட்டம் உருவாவதற்கான சூழ்நிலை உருவாகும் என்பதை தற்போது மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயற்சிக்கிறவர்கள் மறந்து விடக்கூடாது.