காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் நோய்களும் அதற்கான அடிப்படை காரணங்களும்:
1) மனிதா்களுக்கு கழுத்துக்கு மேல் தலையில் வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும், கழுத்துக்கு கீழே உடலில் வரும் பிரச்சனைகளே காரணம்.
2) தலையை அண்டமென்றும், உடலை முண்டமென்றும் கூறுவாா்கள்.
3) தொப்பூழ் கீழே அடி வயிற்றில் மூலாதாரத்தில் ஏற்படும் அதிகப்படியான சூடே மூக்கடைப்பு, தலைவலி, தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறதென தமிழ் மருத்துவம் கூறுகிறது.
4) உதாரணமாக உடலில் சூடு அதிகமானால் கண்கள் சிவக்கின்றன. முடி உதிர்கிறது. முகத்தில் சிறு கொப்புளங்கள் உருவாகிறது.
5) உயர் இரத்த அழுத்தம் அதிகமானால் மூச்சு வாங்குகிறது.
6) வாதம் மற்றும் உயா் இரத்த அழுத்தம் இவை அதிகமானாலும், தலையில் மூளையில் இரத்தக்குழாய் வெடித்து கட்டியாக மாறி மூளையை அழுத்தி பக்கவாதம் மற்றும் நினைவு இழப்பு போன்ற பல பிரச்சனைகளை உருவாக்குகிறது.
7) நீண்ட நாளைய சிறுநீரகக் கற்களை சரிசெய்யாவிட்டால் வாயில் கொப்புளங்களும் புண்ணும் வருகிறது.
8) இப்படி உடலில் ஏற்படும் பிரச்சனைகளே தலையில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
9) ஆகையால் தலையில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் தலைவலி வருகிறது!
10) எனவே காது, மூக்கு பிரச்சனைகளை சரிசெய்ய உடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.
11) தும்மல், மூக்கடைப்பு, சளியால் மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள பிரச்சனைகளே காரணம்!
12) உதாரணமாக வெள்ளை கரிசலாங்கண்ணி பச்சை தழையை மென்று குதப்பி வாயில் அண்ணாக்கில் தேய்க்க கபம் வெளியேறி காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் பெரும்பாலானவை தீரும்.
13) கரிசலாங்கண்ணியை அதிகாலையில் மேல் அண்ணத்தில் தேய்க வேண்டும்.
“நோய் ஒன்றே அதற்கு தீர்வும் ஒன்றே”
நீங்கள் நலமுடன் வாழ சித்த மருத்துவம் துணை நிற்கட்டும்.
– மருத்துவர் விஜய், சித்தா மற்றும் வர்மம்.