எம்.பி.யான திருமா எம்.எல்.ஏ.வுக்குப் போட்டி ஏன்?

செய்தி:

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தொல்.திருமாவளவன் போட்டி. திண்டிவனத்தில் களமிறங்குகிறார் வன்னியரசு.

கோவிந்த் கமெண்ட்:

தற்போது விசிக சார்பில் எம்.பி.யாக இருக்கும் தொல்.திருமாவளவன், ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்திலும் உறுப்பினராக செயல்பட்டவர் தான்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மாறி வருவதாக அவரே சொல்லி, மாநில அரசியலிலும் இனி கவனம் செலுத்தப் போவதாகவும் சொல்லியிருப்பது சிலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், தேர்தலுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கின்ற தொடர் முழக்கத்தைத் துவக்கத்திலிருந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்ற திருமா, தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஏற்படக்கூடிய அரசியல் சூழலைப் பொறுத்து அவருடைய கோரிக்கை சார்ந்து எந்த முடிவையும் எடுக்கலாம்.

மாநில நலனில் அக்கறை காட்டி துரிதமாக செயல்படுவதற்கு அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு பயன்படும்.

தற்போது இருப்பதைவிட மாநில அளவில் இனிமேல் செயல்படும் விதத்தைப் பொறுத்து வலுவானதாக மாறலாம்.

அந்த வகையில் பார்க்கும்போது, எம்.பி. பதவியை உதறிவிட்டு எம்.எல்.ஏ. பொறுப்பிற்கு திருமா போட்டியிடுவது வரவேற்க தகுந்த ஒன்றுதான்.

You might also like