இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது இழுக்கா?

செய்தி:

தவெக தலைவரும் நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டி!

கோவிந்த் கமெண்ட்:

தவெக தலைவரான விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடக்கின்றன.

ஆனால், தமிழகத்தில் இதற்கு முன்பு தேசிய அளவிலும் தமிழக அளவிலும் பல ஆளுமைகள் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகள் என போட்டியிட்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதா உட்பட பலரும் இதில் அடங்குவார்கள்.

இந்த நிலையில் விஜய் மட்டும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதே ஒரு இழுக்கு என்கிற வகையில் பேசுவது உகந்ததாகப்படவில்லை.

You might also like