ரயில்வே துறைக்குச் சிக்கனம்; பயணிகளுக்கு?

செய்தி:

பயணம் செய்வதற்கு 8 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் வாபஸ் இல்லை!

– ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புது அறிவிப்பு.

கோவிந்த் கமெண்ட்:

ரயில்வே துறையில் ஏற்கனவே மூத்தக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளும், முன்னுரிமைகளும் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மறுக்கப்பட்டுவிட்டன.

அதே சமயம் ரயில்வே கட்டணம் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பயணிகளுக்கு பல்வேறு சுமைகள் ஏற்கனவே அழுத்திக் கொண்டிருக்கும்போது, ரயில்வே துறை டிக்கெட்டை ரத்து செய்வதில் கூட இப்படிச் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால், அதன் பாதிப்புகள் பயணிகள் தலையில் தானே போய் முடியும்.

You might also like