செய்தி:
ஏப்ரல்-1 முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச் சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு அமலாகிறது.
– அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே மேற்காசிய போரினால் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்ந்து, இதனால் பல பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சுமைக்கு மேல் சுமையாய், தற்போது டோல்கேட் நுழைவுக் கட்டணத்தையும் உயர்த்தி, இதனால் விலைவாசி ஏறிக்கொண்டே போனால் மதிப்புமிக்க வாக்காளப் பெருமக்கள் என்னதான் செய்வார்கள்?
ஏப்ரல் 1-ம் தேதி மக்களை இப்படியா முட்டாளாக்குவது?