போர் எப்போது தான் முடிவுக்கு வரும்?

செய்தி:

அமெரிக்காவை நம்ப தயாரில்லை; நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம்.

– ஈரான் திட்டவட்டம்

கோவிந்த் கமெண்ட்:

அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் பல இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து பலருக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன.

இதனால் ஏற்படும் பின் விளைவுகளால் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு போய் சேர்வது பாதிக்கப்பட்டு, இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருட்களின் விலை உயர்கிறது.  அதேசமயம் எல்லா பொருட்களின் விலையும் ஏற்றப்படுகிறது.

போர் எங்கோ தூரத்தில் நடந்தாலும், போரின் விளைவை எங்கோ இருக்கும் ஒரு நாட்டின் குடிமகனும் பாதிக்கப்படுகிறான்.

இந்த நிலையில் பேச்சு வார்த்தை எதுவும் வாங்காமல் அமெரிக்காவோ ஈரானோ பரஸ்பரம் சீண்டுவதையே முன்னெடுத்துப் போரை தொடர்ந்தால், அவர்களுக்கு மட்டுமல்ல அதனால் ஏற்படும் நஷ்டம் அவர்களைச் சுற்றி இருக்கும் உலக மக்கள் அனைவருக்குமானது என்பதை போரிடும் நாடுகள் உணர வேண்டும்.

You might also like