இதற்குத்தான் ஆசைப்பட்டதா காங்கிரஸ்?

செய்தி:

நீண்ட இழுப்பறி முடிவுக்கு வந்தது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் வழங்க ஒப்பந்தம்!

கோவிந்த் கமெண்ட்:

“இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா..” என்கின்ற சொற்றொடர் தமிழ் பத்திரிகை உலகில் பிரபலம்.

அதே நிலை தான் தற்போது காங்கிரசுக்கும் சென்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள் 25. இம்முறையும் அதே தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்த நிலையில், பிடிவாதமாக பல்வேறு ஆயத்தங்களை மேற்கொண்டது காங்கிரஸ்.

ஒரு கட்டத்தில் கூட்டணி மாறி தவெக கூட்டணிக்குச் சென்று விடுவார்களோ என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலரே பேச, அதற்கு சாம்பிராணி போட்டு பரவலாக புகையை ஊதிவிட்டன இங்குள்ள ஊடகங்கள்.

காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும் என்று ஒரு சஸ்பென்சை போல ஆன நிலையில் தான், தற்போது 28 தொகுதிகளைப் பெறுவதாக ஒத்துக்கொண்டு திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி சுமூகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த மூன்று தொகுதிகளைப் பெறத்தானா இவ்வளவு முழக்கங்களை, குறிப்பாக ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற மாதிரியான முழக்கங்களை முன்வைத்து ஊடகங்களுக்குத் தீனி போட்டார்களா காங்கிரஸ்காரர்கள்.

எது எப்படியோ சில ஊடகங்களே பெரிதும் எதிர்பார்த்தபடி திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடவில்லை. சற்றே பலவீனமான நிலையில் தான் தேசியமும் திராவிடமும் கைகோர்த்து இருக்கின்றன.

 
You might also like