செய்தி:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 10,175 பேர் மனு வாங்கினர். அ.தி.மு.க.வுக்கு ரூ.15 கோடி கிடைத்தது.
– எடப்பாடி பழனிசாமி களம் இறங்க 2,187 பேர் விருப்பம்.
கோவிந்த் கமெண்ட்:
வேட்புமனு தாக்கலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார் எடப்பாடி!
அவரை தங்களது தொகுதியில் போட்டியிடச் சொல்லி 2,187 பேர் விருப்பமான தாக்கல் பண்ணியிருக்கிறார்கள் என்றால், கட்சிக்குள் அவருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்திருக்கிறார் எடப்பாடி.
அதேசமயம் அவர் கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளுக்கும், தனக்கும் இருக்கும் டிமாண்டை மென்மையாக உணர்த்தியிருக்கிறார் போலிருக்கிறது.
விருப்பமான கொடுப்பதெல்லாம் கட்சிக்காரர்கள் கையில் இருக்கிறது.
ஆனால், விருப்பப்படி வாக்களிப்பதெல்லாம் வாக்காளர் கையில் அல்லவா இருக்கிறது!