களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தமிழ் சினிமா கற்க வேண்டிய பாடம்!

அருமை நிழல்:

குடும்பக் கதைகளின் பொற்காலம் என்று 60-களின் தமிழ் சினிமாவை மதிப்பிடக் காரணமாக இருக்கும் படங்களில் ஒன்று ‘களத்தூர் கண்ணம்மா’. ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ மாபெரும் வெற்றிபெற்றது.

திரையில் 100 நாட்கள் ஓடிய இப்படத்தில் ஐந்து வயதுச் சிறுவன் கமல்ஹாசனை, காதலின் வர்க்க பேதம் கருணை இல்லத்தில் தள்ளும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும்.

பல சாதனை முகங்களை தமிழ் சினிமாவுக்குத் தந்த ‘களத்தூர் கண்ணம்மா’வின் தனிப்பெரும் அடையாளம் கமல்ஹாசன்.

‘தென்னகத்துத் திரைவானுக்கு ஏவி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம்’ என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மாஸ்டர் ‘கமல்ஹாசன்’, அந்தப் படத்தில் ‘சுயம்புவாக’ தந்த நடிப்புக்காகச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார்.

அதன்பின் ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பாத காணிக்கை’, ‘வானம்பாடி’, ‘ஆனந்த ஜோதி’ உள்ளிட்ட படங்களில் அன்றைய சூப்பர் ஸ்டார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசனுடன் நடித்து, பிரபலமானார்.

பின்னர், பாலசந்தரால் ‘அரங்கேற்றம்’ (1973) படத்தில் திருப்புமுனை பெற்று, கவின்மிகு மலையாளம் பேசியபடி ‘கன்னியாகுமரி’யில் (1974) கதாநாயகனாகி, உலகநாயகனாக உயர்ந்துள்ளார்.

‘களத்தூர் கண்ணம்மா’ போன்ற பொற்காலத் திரைப்படங்களில் இன்றைய தமிழ் சினிமா கற்றுக்கொள்ள எவ்வளவோ உண்டு.

குறிப்பு: அன்றைய ஜனாதிபதியாக இருந்த டாக்டர்.ராதாகிருஷ்ணன் இடமிருந்து களத்தூர் கண்ணம்மா படத்திற்காக விருது வாங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like