கரூர் துயரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

எம்.பி.க்கள் குழு விளக்கம்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க சார்பில், அதன் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மகாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்ளனர்.

அந்தக் குழுவினர் இன்று (30.09.2025) காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது, அந்தக் குழு சார்பில் ஹேமா மாலினியும் அனுராக் தாகூரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் கள ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தலைமையகத்தில் சமர்ப்பிப்போம். கள ஆய்வு மேற்கொண்டால்தான் இந்நிகழ்வுக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.  

கரூர் சம்பவத்திற்கு யார் காரணம், தவறு எங்கே நடந்தது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக விசாரிப்போம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

You might also like