அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்!

நாகூர் ரூமி காலத்தை வென்ற கல்வெட்டு மொழிகள்:

* நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்*

*மரியாதைக்குரிய விருந்தாளி நீ
இந்த உலகின் அற்ப நிலத்துண்டொன்றை
ஒரு பிச்சைக்காரனைப் போல
யாசித்துக் கொண்டிருக்காதே.*

*வானில் தெரியும் நிலவைப் பார்
ஏரியில் தென்படும் ஒன்றை அல்ல*

*வேர்களுக்கிடையே தேட வேண்டியதை
சிலபோது கிளைக்களுக்கிடையில்
நீ தேடிக் கொண்டிருப்பாய்*

*சிறகுடன் பிறந்த நீ
வாழ்க்கையில் தவழ விரும்புவதேனோ*

*நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ
அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது*

*கற்பனை செய். ஒரு குன்றின்
உச்சியிலிருந்து ஒரு கழுகைப் போல
நீ மிதந்திறங்குவதாக நினைத்துப்பார்
ஒரு புலியைப் போல
நீ தன்னிச்சையாகத் திரிவதாக
இரை தேடி திரிகையில்தான் நீ மிகவும் அழகு.*

*நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ…
அது உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது.*

*உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின்
கடைசி உள்மூச்சும் வெளிமூச்சும் தான்
இந்த வாழ்க்கை
அதில் அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்!*

  • நாகூர் ரூமி
You might also like