கலையின் புனிதத்தை உடைத்த ‘நீரூற்று’!

1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலைக் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார்.

ஹார்ட்வேர் ஷாப்பில் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்துவதற்காக விற்கப்பட்டுக் கொண்டிருந்த பீங்கானில் செய்யப்பட்ட அழகிய குழைமைத் தன்மையுடன் கூடிய ஒரு பீங்கான் கோப்பையை வாங்கினார்.

அதன் மீது வெறுமனே R.Mutt 1917 என்று தனது கையெழுத்தை இட்டார். அது தனது கலைப்படைப்பு என்று சொல்லி கண்காட்சியில் வைக்குமாறு கொடுத்தார்.

கண்காட்சிக்குப் பணம் கட்டியவர்கள் கொடுக்கும் படைப்புகளை காட்சிப்படுத்த வேண்டும் எனும் நிபந்தனை இருந்ததால் அமைப்பாளர்கள் அவர் கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் கண்காட்சி பகுதியில் அதை வைக்கவில்லை.

பிறகு அந்த படைப்பு Alfred Stieglitz’s studio என்பதால் புகைப்படம் எடுக்கப்பட்டு THE BLIND MAN எனும் டாயிசம் பேசும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அன்று முதல் இப்படைப்பு கலை வரலாற்றாசிரியர்களால் 20 ம் நூற்றாண்டின் ஒரு அதிரடி அழகியல் (avant-garde) படைப்பு என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கலை என்பது புனிதமானது என்கிற பிம்பத்தை உடைத்து நொறுக்கியவர் மார்சல் டுஷாம்ப்.

– கலை விமர்சகர் இந்திரன் ராஜேந்திரன்

You might also like