நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், திரைக்கலைஞர் சிவகுமார், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ”கல்வியும், அன்பும் ஒன்றாக கிடைப்பது இல்லை. அது அம்மாவிடம் கிடைக்கும். அகரம் பவுண்டேசனில் கிடைக்கும். இங்கே அகரம் பேசுவது, நல்ல செயல்கள், அன்பு, கல்வி. இந்த ஆயுதத்தை வைத்து உலகை வெல்லலாம்.
சமூக வானில் இப்படி நல்லது செய்தால் முள்கீரிடம்தான் கிடைக்கும். மற்றவர்கள் கற்றுக்கொள்ள ஆவண செய்வேன் என்று செயல்படுவது பெரிய விஷயம்.
இங்கே பலன் பெற்று டாக்டர் ஆன பலரை காண்பித்தார்கள். அனைத்து பிள்ளைக்களுக்கும் மருத்துவம் கிடைக்காதபடி சட்டம் செய்துவிட்டது. அதை மாற்றி எழுதக்கூடியது கல்விதான்.
சர்வதிகார, சனாதன சங்கிலிகளை நொறுக்கி தள்ளிக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான். சூர்யாவின் பணியை நேற்று கூட முதல்வரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அரசு ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது.அதில் எனக்கும், உங்களுக்கும் பங்கு உண்டு. நீட் கூட அரசியல் அல்ல, கல்வி சம்பந்தப்பட்டதுதான்.
கமல்ஹாசன் மன்றம் நற்பணி இயக்கத்தை சிவகுமார் அண்ணன்தான் அப்படி மாற்ற வைத்தார். நான் பெரிய நடிகராக மாறும்போது, அவர் எனக்காக இடம் கொடுத்தவர். நிஜமாகவே எங்களுக்குள் அண்ணன், தம்பி உறவு வலுக்க ஆரம்பித்தது.
டீசர், டிரைலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கிடைக்காத சந்தோசம், இதுபோன்ற விழாக்களில் கிடைக்கிறது.
பல மக்களை சந்தோசப்படுத்தவது கலைத்துறை, அது வியாபாரத்துறை. அதுதான் சோறு போடுகிறது.”