தமிழ்த் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாட வைத்தது எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம்.
‘தாயில்லாமல் நானில்லை…’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும்.
இந்தப் பாடல் காட்சியின் சில பகுதிகள் ஒகேனக்கலில் படமாக்கப்பட்டன. பாறைகள் நிறைந்த பகுதியில் பாய்ந்து வரும் தண்ணீரின் நடுவே எம்.ஜி.ஆர். அமர்ந்திருப்பார்.
கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் அடித்துச் சென்றுவிடும். லாங் ஷாட்டில் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆரைச் சுற்றி சுமார் நூறடி தொலைவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
இதைவிட இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே?
இது ஸ்டாக் ஷாட் போலிருக்கும். இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருப்பார். காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்.
நன்றி: முகநூல் பதிவு