தெரு நாய்களுக்கு வீட்டில் உணவளிப்பீர்களா?

செய்தி:

“தெரு நாய்களுக்கு உங்கள் வீட்டில் வைத்து ஏன் உணவளிக்கக் கூடாது?” – மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

கோவிந்த் கமெண்ட்:

தெரு நாய்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தவரைப் பார்த்துதான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி.

அதோடு விலங்குகளுக்குத்தான் இடம் இருக்கிறது, மனிதர்களுக்கு இல்லை என்கின்ற எதார்த்தைத்தையும் கூடவே உணர்த்தியிருக்கிறார் நீதிபதி.

இந்தியா முழுக்க ஒவ்வொரு ஆண்டும் தெரு நாய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. 

சரிவர உணவு அளிக்கப்படாத நிலையில், தெருக்களில் நாய்கள் மனிதர்களையும், குறிப்பாக பள்ளிக்குப் போகக் கூடிய சிறுவர்களைக்கூட துரத்திக் கடிப்பது அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கிறது. 

இது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கிறது. விலங்குகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், உடனே குரல் கொடுத்து அதற்காக நீதிமன்றம் வரை செல்பவர்கள் அதே விலங்குகளிடம் கடிபடுகிறவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதில்லை.

மாநில அரசுகளோ தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்திருக்கிறோம் என்கின்ற சுருக்கமான பதிலையே எப்போதும் நாசுக்காக முன்வைக்கின்றனர்.

அண்மையில், தெரு நாய்களால் இந்த அளவுக்குப் பரவலான பாதிப்புகள் உருவாகி, அதனால் சில மோசமான மரணங்கள் கூட சம்பவத்திருப்பதை அடுத்துதான் உச்சநீதிமன்ற நீதிபதி நாய்களுக்காக பரிந்து மனு அளித்தவரைப் பார்த்து இத்தகைய கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

இது தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான பரிவுக்குரலாகவும் இருக்கிறது.

You might also like