குறைகளைத் திருத்திக் கொள்கிறேன்!

– ஏ.பி.நாகராஜன்

துக்ளக்-கில் ‘போஸ்ட் மார்ட்டம்’என்ற பெயரில் சினிமா விமர்சனங்கள் சற்றுக் கடுமையாகவே எழுதப்பட்டன. சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களும் அதற்குப் பதில் அளித்திருக்கிறார்கள்.

அந்தப் பதில்களில் தொனித்த குரல் ஆச்சர்யம். அகந்தை இல்லாத பணிவோடு அந்தப் பதில்கள் இருந்திருக்கின்றன.

சாம்பிளுக்கு இரண்டு;

1 . காரைக்கால் அம்மையார்- பட விமர்சனத்தில் வெளிப்பட்ட கடுமைக்கு அப்படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அளித்த பதிலில் ஒரு பகுதி;

“இந்த உலகில் அதுவும் இந்தக் காலத்தில் மனிதனாகப் பிறந்ததே ஒரு குறை தான்.
அப்படியிருக்கும் போது அவனுடைய படைப்பில் குறையிருப்பது வியப்பல்ல.
நீங்கள் சொல்லும் குறைகளைத் திருத்திக் கொள்கிறேன்”
– (1.4.1973 துக்ளக் இதழ்)

2. ‘சொந்தம்’ பட விமர்சனத்திற்கு படத்தின் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் பதில்;
“நல்லது என்று நீங்கள் கருதியதைச் சொன்னதற்கு ஒருமுறை நன்றி என்றால்,
தவறு என்று நீங்கள் கருதியதைச் சொன்னதற்கு இருமுறை நன்றி!”.
– (1.8.1973 துக்ளக் )

விமர்சனங்களை எதிர்கொள்கிற விதத்தில் இப்படியும் அன்றைய இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்.

#இயக்குநர்_ஏ_சி_திருலோகசந்தர் #இயக்குநர்_ஏ_பி_நாகராஜன் #a_p_nagarajan #a_c_thiruloka_chander

You might also like