உலகில் உள்ள எல்லோரும் சமம் என்ற தத்துவத்தை உணர்த்தியவர் வள்ளலார். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பது தான் அரவது கொள்கை.
நம்மை மயக்கும் மாயைகளை நீக்கி ஞானத்தை அடைய உனக்குள்ளே இருக்கும் ஜோதியைக் காண வேண்டும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார்.
இந்த நிலையில், தைப்பூச விழாவையொட்டி வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன விழா நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த வள்ளலாரை தரிசனம் செய்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்று முழக்கமிட்டனர்.


