பிரஷர் குக்கரில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நவீன சமையலறையில் ராணியாக பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளது பிரஷர் குக்கர்.

சமையல் நேரத்தை குறைக்கவும், எரிவாயுவை மிச்சப்படுத்தவும் இல்லத்தரசிகளின் தோழியாக இருக்கிறது.

சமையல் பாத்திரத்தின் பரிணாம வளச்சிகளில் இதுவும் ஒன்று. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, சமையலில் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஆண்களின் பெரும்பாலான நபர்களுக்கு உதவியாக இருப்பது இதுதான்.

விசில் எண்ணிக்கையை பொறுத்து சாதம், பருப்போ வெந்து விட்டது என்று கணித்து விடலாம்.

பிரஷர் குக்கரில் சமைக்கும் நேரம் மிச்சமாகும் என்பதால் மட்டுமே அது பற்றிய தெளிவு இல்லாமல் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பிரஷர் குக்கரில் ஒரு சில உணவுகள் தயாரிக்கும் போது அதன் இயல்பு தன்மை மாறி அதில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது.

இதில் முக்கயமானதாக கூறப்படுவது மாவுச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை குக்கரில் சமைக்க கூடாது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மாவுசத்து நிறைந்த உணவுப் பொருட்கள் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அரிசி உணவுகள்

பெரும்பாலான வீடுகளில் பிரஷர் குக்கரில் தான் சோறு தயாரிக்கப்படுகிறது.

ஆனால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அக்ரிலாமைடு கெமிக்கலை உருவாகிறது.

இதனால் அழையா விருந்தாளியாக பல நோய்களை உடலுக்குள் கொண்டு வருகிறது.

உடல் பருன், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனையை அதிகப்படுத்துகிறது.

இதுவே வடித்த சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவு சத்து குறைந்து விடுவதால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறது.

கிழங்கு வகைகள்

கிழங்கு வகைகள் பொதுவாக மரவள்ளி, சர்க்கரைவள்ளி, உருளைக்கிழங்கு, இதுபோன்ற கிழங்குகள் பெரும்பாலும் குக்கரில் தான் வைக்கப்படுகிறது.

ஏனெனில் இது வேக நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் அனைவரின் தேர்வாக குக்கர் இருக்கிறது.

ஆனால் இந்த வகை கிழங்குகளில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் இதனை குக்கரில் வேக வைக்க கூடாது.

அப்படி வேக வைத்த உணவை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

பாஸ்தா தவிர்க்க வேண்டும்

மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று பாஸ்தா இதையும் நாம் பிரஷர் குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதில் மாவு சத்துக்கள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

மைதா மாவில் இருந்து தயாரிக்கும் உணவு என்பதால் இதில் கார்போஹைட்ரேட் இருப்பதால் குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாஸ்தாவை கொதிக்க வைத்து வேகவைத்து எடுக்கலாம்.

பிரஷர் குக்கரில் சமைப்பதால் ஒரு சில பாதிப்புகள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கின்றன.

இதில் சமைக்கப்படும் உணவில் இருக்கும் லெக்டின் அளவைக் குறைக்க உதவுகிறது.

லெக்டின் என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகை கெமிக்கல் ஆகும்.

குக்கரில் நன்மை தீமை என்று இரு பக்கங்களும் உண்டு. அதை நாம் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.

எதை சமைக்கலாம் எதை சமைக்க கூடாது என்பதை நாம் தெளிவாக தெரிந்து சமைத்தால் எல்லாம் ஆரோக்கியமே!

– யாழினி சோமு

You might also like