குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு உருவானது எப்படி!

  • எக்ஸ்நோரா நிர்மல்

தமிழ்நாடு காவல்துறையில் குழந்தை கடத்தலைத் தடுக்க ஒரு பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஒரு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் எக்ஸ்நோரா நிர்மல்.

“குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் குரூரங்கள் பற்றி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு பட காட்சி காட்டினேன். அதிர்ந்து போனார். பிறகு ஒரு பத்திரிகை சந்திப்பு. அதை தொடர்ந்து எக்ஸ்னோரா சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிலை திருடுபோனால் கண்டுபிடிக்க காவல்துறையில் ஒரு தனிப் பிரிவு உள்ளது.

அதேபோன்று காணாமல்போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க ஒரு பிரிவு உண்டாக்க வேண்டும் என்ற எக்ஸ்னோரா கோரிக்கை விடுத்தது. பிறகு அது ஏற்கப்பட்டு ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. அதனால் காணாமல் போகும் எண்ணற்ற குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டனர்” என்று நினைவுகூர்ந்துள்ளார்.

You might also like