மீண்டும் புதிய களத்தில் நடிக்கும் சமந்தா!

சமந்தா ரூத் பிரபு வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ உறுதி செய்திருக்கிறது.

இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் ராஜ் & டிகே தலைமையில் உருவாகி வருகிறது. அவர்கள்தான் இந்தத் தொடரின் முதன்மைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள்.

இந்த உள்ளூர் அளவிலான தொடருக்கான கதையை ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர்.மேனன் எழுதியுள்ளார்.

இதன் தயாரிப்புப் பணிகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருவதையும் இதன் ஸ்ட்ரீமிங் சேவை வழங்குநர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, படப்பிடிப்புக் குழுவினர் வட இந்தியாவிற்கும், பின்னர் செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சர்வதேச படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்வார்கள்.

“மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தத் தொடரில் வருண் மற்றும் எங்களோடு அணிவகுத்துள்ள வியக்கத்தக்க திறமை வாய்ந்த நடிகர்களின் குழுவோடு இணைந்து ஒரு முற்றிலும் புதிய அவதாரத்தில் அவரைத் திரையில் பார்வையாளர்கள் காண்பார்கள்” என்று ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் தெரிவித்தார்.

’தி ஃபேமிலி மேன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாங்கள் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் ஒரு மிகப்பொருத்தமான தேர்வாக இருந்தார்.

அவரை எங்களோடு இணைத்துக் கொண்டதில் எங்களைவிட வேறு யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க முடியாது” என்றார்கள் படைப்பாளி இரட்டையர்களான ராஜ் & டி.கே.

You might also like