ஆள வந்தார் அண்ணா…!

தமிழாண்டான் – தமிழர்
மனம் ஆண்டான்
தமிழ்நாடெனும் தனியொரு
நிலம் ஆண்டான்…

இனம் ஆண்டான்  – எங்கள்
குலம் ஆண்டான்
இதற்கிணையிலை எனும்படி
வளம் ஆண்டான்…

மொழி ஆண்டான்  – தமிழ்த்
திறம் ஆண்டான்
வழி இதுவென விரல்வழி
திசை ஆண்டான்…

குறள் ஆண்டான்  – கம்பன்
திறம் ஆண்டான்
சங்கத்தமிழொலி முழங்கிட
புவி ஆண்டான்…

ஆண்டான் இலையெனும்
படி ஆண்டான்
தமிழர்அடிமை மனநிலை
முடி வாண்டான்…

– ஆதிரன்

You might also like