வங்கக் கடலில் அண்மையில் உருவான மாண்டஸ் புயலிலால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன.
அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன.
இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 9-ந்தேதி இரவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் மர அறுவை எந்திரங்களை பயன்படுத்தி அகற்றத் தொடங்கினார்கள்.
அந்த வகையில் 644.6 டன் எடையுள்ள மரக்கழிவுகள் டிப்பர் லாரிகளின் மூலம் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.