முலாயம்சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.

இந்நிலையில் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது. சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது.

முலாயம் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

You might also like