எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி விண்ட்சர் என்ற பெயர் கொண்ட 2ம் எலிசபெத் 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது.
இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் விக்டோரியா ராணி மட்டுமே 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்தார். அந்தச் சாதனையை 2ம் எலிசபெத் முறியடித்து 70 ஆண்டுகள் இங்கிலாந்து அரண்மனை அரியாசனத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார்.
1947 ல் 2ம் எலிசபெத், பிலிப் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்கள் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் 2ம் எலிசபெத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எலிசபெத்தின் கணவர் பிலிப் 99 வயதில் காலமானார்.
இந்நிலையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 96. எனவே 73 வயதான அவரது மகன் சார்லஸ் அடுத்த மன்னராக பதவியேற்க உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவர் அரசியாக இருந்த காலத்தில் இங்கிலாந்தில் 14 பிரதமர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர் 16 நாடுகளின் ராணியாகவும் இருந்துள்ளார்.
இறுதியாக அவர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி என்பது, அண்மையில் அந்நாட்டின் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸ், 2ம் எலிசபெத்தை சந்தித்து வாழ்த்து பெற்றது தான் கடைசி நிகழ்ச்சியாகும்.
இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், அரசர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எலிசபெத் இறந்ததையடுத்து இங்கிலாந்து தேசியக்கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அதோடு எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர்.