வெற்றியடைந்த வீரன்!

அருமை நிழல்:

குலசாமிகளில் பிரபலமான மதுரை வீரனுக்கு இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் மூலக் கோயில் இருக்கிறது.

பரம்பரையாக தொன்றுதொட்டு மதுரைவீரன் நாடகம் வடிவிலும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அப்படிப்பட்ட கதையை எம்.ஜி.ஆர். நடித்து திரைப்படமாக வெளிவந்த போது பெரும் வரவேற்பு கிடைத்தது. எம்.ஜி.ஆருடைய திரை உலக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றது மதுரை வீரன்.

வெற்றிபெற்ற அந்தத் திரைப்படத்தில் வெளிவந்த பாடல்கள் இன்றும் நினைவில் கொள்ளத்தக்கவை.

குறிப்பாக அதில் இடம்பெற்ற “வாங்க மச்சான் வாங்க” என்ற பாடல் உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கின்றன.

அப்போது வெளிவந்த‘மதுரை வீரன்’பட விளம்பரம் இத்துடன்!

You might also like