பெரிதாக நான் சம்பாதித்தது என்று எதுவுமில்லை. நினைத்த நேரத்தில் சென்று திரைப்படம் பார்க்கிறேன். வீட்டுக்கு வருகிறேன். நினைத்த நேரத்தில் நண்பர்களைப் போய்ப் பார்க்கிறேன்.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஹானிமேன் எனும் மருத்துவரே ஹோமியோபதி மருத்துவமுறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார். 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.
945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளனர். இதில், 81 பேர் அதாவது 8 சதவீதம் பேர், கடுமையான குற்ற வழக்குகள் உள்ளவர்கள்.
எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.
திரைத்துறை, தமிழ்த்துறை, அரசியல், ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். கட்சிக்காரர்களால் ‘அருளாளர்‘, ‘ஆர்.எம்.வீ’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டை, அங்கவஸ்திரம் அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறமும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.
தூர்ந்து கிடக்கும் வீராணம் ஏரியைத் தூர் வார வேண்டும், ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், புவனகிரியில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்டவை, இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள்…