Browsing Category
கவிதைகள்
அன்பின் சாலை இன்று அங்காடிச் சாலை!
படித்ததில் ரசித்தது:
பெண் வேண்டும் என்று கேட்காமல்... 'வாழை மரம் வேண்டும்', 'விதை நெல் வேண்டும்' என்று கேட்கிற ஒரு வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. இன்று நாம் அந்த வழக்கத்தை மாற்றிவிட்டோம்.
மாவு அரைக்கும் எந்திரம், துணி துவைக்கும்…
பிரபலங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்!
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை.
1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
1. சத்தியசோதனை,…
அளவிட முடியா அம்மாவின் அன்பு!
வாசிப்போம் ரசிப்போம்:
கருகிவிடுமெனும் பரபரப்பில்
கைசுட்டுக் கொண்டது
எத்தனையாவது முறையெனச்
சொல்ல முடியாது
அம்மாவால்...!
- யுகபாரதி
இருளின் இன்னொரு முகம்!
‘நட்சத்திரங்களை விட
நிறையவே பேசுவது
அவற்றின் இடையுள்ள
இருள்’
- பிரமிளின் நினைவுநாளையொட்டி அவரது கவிதைத் தொகுப்பிலிருந்து...
‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழாத் துளிகள்!
2024, சனவரி முதல் தேதி அன்று சென்னை காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழா அரங்கு நிறைந்த கூட்டத்துடன் நடந்தது.
விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், கமல்ஹாசன், விஞ்ஞானி…
மறதி ஒன்றே மன அமைதி தரும்!
“உன்னை அவ்வளவு வெறுக்கும் மனிதனிடம்
உன்னால் எப்படி
சிரித்துப் பேச முடிகிறது?”
என்று கேட்டாள் வியப்புடன்
எனக்கு பெருந்தன்மை என ஒன்றுமில்லை
சகிப்புத்தன்மை என ஏதுமில்லை
எனக்கு எல்லாமே மறந்துபோகிறது
ஒரு சிகரெட் பாக்கெட்டை
எங்கே வைத்தேன் எனத்…
உண்மை உங்களிடமே இருக்கிறது!
கவிதை:
“அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று
பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக்
கூவிக் கொண்டிருந்தான்.
“யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன்.
‘உண்மை’ என்றான்.
“கடைத்தெருவில் அது அனாதையாக
அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே
அடையாளம்…
வளர முடியாவிட்டாலும் தேய்ந்து போகாதே!
இருட்டு...
தனி ஆத்மாவின் ஒரே நண்பன்!
இது உங்களுக்குப் பிடிக்காது.
வெளிச்சம் இல்லாமல்
'முன்னேற முடியாது' என்பீர்கள்;
'பின் வாங்கவும் முடியாது'
என்று நான் சொல்கிறேன்.
என்னால் வளரமுடியாவிட்டாலும்
தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்.
அது எனக்குத்…
வயோதிகத்தை விழுங்கிய மரணம்!
வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்ற பொழுது
"விடு என்னை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை"
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்
'சற்று முன்தான் நான் வயோதிகம்,
இப்போது மரணம்' என்று
என்னை இறுகத் தழுவிக்…
பாரதி வெளியிட்ட விகட சித்திரங்கள்!
எழுத்தாளர் இந்திரன்
பிராந்திய மொழி இதழ்களில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான் என்பது பலருக்குத் தெரியாது. தனது ‘இந்தியா’ பத்திரிகையில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் பாரதியார்.
ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் நான்…