Browsing Category
கதம்பம்
நல்லிணக்கம் வாழ்வை மேம்படுத்தும்!
இன்றைய நச்:
நெறியுள்ள வாழ்க்கை என்பது
உங்களின் தினசரி செயல்களில்,
உங்களின் தினசரி வாழ்வில்
ஒரு முழுமையான
நல்லிணக்கம் இருக்கின்ற
ஒரு வாழ்க்கை
என்பதைக் குறிக்கிறது!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
எண்ணங்கள் உயர்வைத் தரும்!
பல்சுவை முத்து:
எண்ணத்தை எண்ணத்தால்
ஆராய, ஆராய
இயற்கை ரகசியங்கள்
எண்ணத்துள் காட்சியாய் விரியும்!
எண்ணத்தின் இவ்வுயரவை
இயற்கையே பேசுதென்றும்
இதுவே உள்ளுணர்வென்றும்,
இயல்புவோர் அனுபவத்தோர்!
- வேதாத்திரி மகரிஷி
மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!
ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்
சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில்…
ஒளியைத் தேடுபவர்கள்!
தாய் சிலேட்:
இருளை
உணராதவர்கள்
ஒளியைத்
தேடமாட்டார்கள்!
- அண்ணல்அம்பேத்கர்
பாதுகாப்பு அரணாக இருக்கும் பணிவு!
பல்சுவை முத்து:
நம்மைவிட உயர்ந்தவர்களிடம்
பணிவாக இருப்பது நம் கடமை;
நமக்குச் சமமானவர்களிடம்
பணிவாக இருப்பது நமது மரியாதை;
நம்மைவிட தாழ்ந்தவர்களிடம்
பணிவாக நடத்தல் நமது கண்ணியம்;
அனைவரிடமும் பணிவாக
நடந்து கொள்வது
நமக்குப் பாதுகாப்பு!…
தமிழில் தேர்வெழுதி துணை ஆட்சியரான கலைவாணி!
கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை
ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார்.
இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல,…
பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!
பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்:
🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்?
உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?
🍁 சீமான்களில்…
சூழ்நிலைகளால் உருவாக்கப்படும் மனிதன்!
தாய் சிலேட்:
சூழ்நிலைகள் ஒரு நபரை
உருவாக்குவதில்லை;
அவை அவரை
வெளிப்படுத்துகின்றன!
- ஜேம்ஸ் ஆலன்
வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது எப்போது?
இன்றைய நச்:
அந்தந்த பருவத்தில் விளையாத பழங்களை, எல்லா பருவத்திலும் உண்ணத் தொடங்கியபோது தான் வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது!
- ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுக்கோகோ
நல்வழிப்படுத்தும் நூல் வாசிப்பு!
புத்தக மொழிகள்:
பத்து பறவைகளோடு பழகி
நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது;
பத்து நதிகளோடு பழகி
நீங்கள் ஒரு நதியாக முடியாது;
பத்துப் புத்தகங்களோடு
பழகிப் பாருங்கள்;
நீங்கள் பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள்!
- ஈரோடு தமிழன்பன்