சக நடிகையின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்த எம்.ஜி.ஆர்.!

அருமை நிழல் :
 
அறுபதுகளில் புகழ்பெற்ற தென்னிந்தியக் கதாநாயகிகளில் ஒருவர் ராஜசுலோச்சனா.
 
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த இவர், 1961-ல் வெளியான ‘நல்லவன் வாழ்வான்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.
 
அறிஞர் அண்ணா கதை, வசனத்தில் பி. நீலகண்டன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ராஜசுலோச்சனாவுக்கு கிளாப் அடிக்க வேண்டும் என்றொரு ஆசை.
 
எம்.ஜி.ஆர். நடித்த ஒரு ஷாட்டுக்குக் கிளாப் அடிக்கக் கற்றுக் கொடுத்தார் இயக்குநர். ஒருமுறைதான் மிகச் சரியாக அவர் கிளாப் அடித்தார்.
 
கிளாப் அடிக்கும் முன்பு எம்.ஜி.ஆர். வியப்பதைப் புகைப்படக்காரர் எடுத்த க்ளிக் இந்த காட்சி.
 
நன்றி: தி இந்து
You might also like