தெருநாய்கள் கடிப்பதைக் கட்டுப்படுத்த புது வழியா?

செய்தி :

தெருநாய் தத்தெடுப்பை ஊக்குவிக்க டிஜிட்டல் தளம்!

– கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி அறிவிப்பு.

கோவிந்த் கமெண்ட்:

தமிழகத்தில் இதற்கு முன்பும் தெருக்களில் நாய்கள் திரிந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

அவை யாரையும் விரட்டி கடித்துக் குதறியதெல்லாம் செய்திகளாக அப்போது வெளியாகவில்லை.

ஆனால், இப்போது பல மாநிலங்களிலும் நாய்கள் பலரை விரட்டிக் கடிக்கின்றன.

குறிப்பாக சிறுவர் சிறுமிகளை விரட்டி விரட்டி கடிக்கிற காட்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்க்கிறபோது பதற வேண்டியிருக்கிறது.

பசிக்கு சரிவர தீனி கிடைக்காத நிலையில், தெருநாய்கள் இப்படி பிறரைக் கடிக்க முயல்வதாக சொல்கிறார்கள் நாய் மீது கருணை காட்டும் காருண்ய சங்கத்தினர்.

இதற்கு குறைந்தபட்ச தீர்வாக நாய்களை பராமரிப்பதற்கான ஒரு வழிமுறையை தத்தெடுப்பின் மூலமாக கொண்டு வருவது பலரை நாய்க்கடியிலிருந்து காப்பாற்றும்.

You might also like