அருமை நிழல் :
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி எனும் அரசியல் கட்சியைத் துவக்கினார்.
அப்போது திருமதி ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக அணியுடன் இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் செய்தார். தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதியில் சிவாஜி, வேனில் இருந்தபடி பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
உடனிருப்பவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ஆர்.எம். வீரப்பன்.