டெல்லி செல்லும் முதல்வர் விஜய்: எதிர்பார்ப்பில் தமிழகம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு தேசிய தலைவர்களைச் சந்திக்கவும் மூன்று நாட்கள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.

அதோடு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 10ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஜூன் 12ஆம் தேதி மாலை சென்னை திரும்ப உள்ளார்.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திலும், பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக சந்திப்புகளிலும் கலந்துகொள்ள உள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் நிதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த முறை டெல்லி பயணத்தில் சந்திக்க முடியாத குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து மாநில நலன் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயணத்தின்போது, தமிழ்நாடு நலன் குறித்து முதலமைச்சர் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதே அரசியல் நோக்கர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின்  எதிர்பார்பாக உள்ளது.

சு. சுரேகா

You might also like