செய்தி:
62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
– லட்சக்கணக்கில் பணம் சிக்கியது.
கோவிந்த் கமெண்ட்:
தவெக ஆட்சி அமைந்த மிகக் குறுகிய காலத்தில் ஆங்கங்கே சில அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன.
திருச்செந்தூர் கோவிலுக்குள் அதிரடி சோதனை நடந்து அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடந்து லஞ்சத்தொகை பெற்றது தெரிய வந்திருக்கிறது.
இதை ஒட்டியும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இன்னும் அடுத்தடுத்து டாஸ்மாக் உள்ளிட்ட நியாயவிலைக் கடை உள்ளிட்ட மக்களோடு நேரடியான தொடர்பில் இருக்கிற இடங்களிலும் இதே மாதிரி அதிரடி சோதனையை மேற்கொள்ளலாம் காவல் நிலையங்கள் உட்பட.