செய்தி:
டெல்லியில் எட்டாம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க திமுக மறுப்பு.
– காங்கிரஸ் இடம்பெறுவதால் அதிரடி முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
பலரும் எதிர்பார்த்த திமுகவின் முடிவு. காங்கிரஸ் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு முன்னரே டெல்லியில் காங்கிரசார் அமரும் இருக்கைக்கு அருகில் தாங்கள் அமர விரும்பவில்லை என்று கடிதம் எழுதினார் கனிமொழி எம்பி,.
தற்போது இந்தியா கூட்டணியில் தாங்கள் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது திமுக.
காங்கிரஸிடமிருந்து விலகி இருக்கிறார்கள் என்பதை உணர உணர முடிகிறது.
அதே சமயம் யாரை நோக்கி யார் யாரிடம் நெருக்கமாக போகப் போகிறார்கள் என்பதையும் அடுத்து வரும் நாட்கள் நிரூபிக்கலாம்.