மகனை சட்டத்தின் முன் நிறுத்திய அமைச்சர்!

செய்தி:

தெலங்கானாவில் போக்சோவில் சிக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த மத்திய அமைச்சர்.

– சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருத்து.

கோவிந்த் கமெண்ட்:

திருவாரூர் மண்ணில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது மகனை தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மன்னனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதை நினைவுகூறும் சிலை இன்னும் அங்கிருக்கிறது.

தற்போது மகனை சட்டத்தின்முன் நிறுத்தி, அனைவரும் சமம் என்றிருக்கிறார் பாஜக தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டிட் சஞ்சய் குமார்.

பாஜக-காரராகவே இருந்தாலும், பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் நிரம்பிய மகன்களை தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்.

எல்லா அரசியல்வாதிகளும் இதைப்போல சமநீதி வழங்கினால், அது மக்களுக்கும் நல்லது சம்மந்தப்பட்ட மகன்களுக்கும் நல்லது.

இப்படிப்பட்ட அப்பாக்கள் வளர்க!

You might also like