மேற்கு வங்கத்தில் தாமரை: மோடி கருத்து!

செய்தி:

மேற்கு வங்கத்தில் மலர்ந்தது தாமரை; அச்சமற்ற புதிய சகாப்தம் தொடக்கம் என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ உரை.

கோவிந்த் கமெண்ட்:

மேற்குவங்க மாநிலம் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்ட மாநிலம். பொதுவுடைமை இயக்கம் தொடர்ந்து அங்கு ஆட்சி செய்திருக்கிறது.

அங்கு முதல்வராக இருந்து ஜோதிபாசு உள்ளிட்ட தலைவர்கள் நாடு முழுக்கத் தெரிந்த, நன்மதிப்பைப் பெற்ற தலைவர்களாக இருந்தார்கள்.

அவர்களை வீழ்த்திவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தார் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி.

தேர்தல் ஆணையம் மூலம் எதையோ செய்ய நினைக்கிறது பாஜக என்று அவர் குற்றம்சாட்டியும், பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்குவங்க மக்கள் விரும்பி உண்ணும் மீன் உணவை உண்ண முடியாத நிலை ஏற்படும் என்றெல்லாம் கூட எச்சரித்தும் அங்கு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறது பாஜக.

ஒருகாலத்தில், செங்கொடி உயரே பறந்த மண்ணில் தற்போது காவிக் கொடி பறக்க ஆரம்பித்திருக்கிறது.

அதைத் தான் பெருமிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.

You might also like