தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த பிரகாஷ்ராஜ்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி இயக்கத்தினர் பேரணியாகச் சென்று வெவ்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
 
தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமாரை திருடன் என்று சொல்லும் அளவுக்கு சென்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
 
தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு வாக்குகளைப் பதிவு செய்யும்போது எப்படிப்பட்ட மாற்று ஏற்படுத்த முடியும் என்றும், தொழில்நுட்பக் காரணங்களை விளக்கியிருக்கிறார்.
 
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகுவதை வலியுறுத்தியிருக்கிற பிரகாஷ்ராஜின் இந்த அதிரடியான செய்தியாளர் சந்திப்பு இணையதளத்தில் பெரும் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
You might also like