செய்தி :
2019 முதல் 2026-ம் ஆண்டு வரை, மோடி அரசு 36 நாடுகளிலிருந்து 288 குற்றவாளிகளை (வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியவர்கள்) வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவந்துள்ளது.
– உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்.
கோவிந்த் கமெண்ட் :
பாஜக அரசின் கண்காணிப்பின் கீழே வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 288 குற்றவாளிகள் மறுபடியும் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இனி அவர்கள் மீது தப்பி ஓடியதற்கும் சேர்த்து வழக்குத் தொடரப்படலாம். அதெல்லாம் இருக்கட்டும்.
அண்மைக் காலமாக தமிழகத்திலிருந்து வெவ்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியவர்கள் என்று பல்வேறு பெயர்கள் அடிபட்டுக் கொண்டே இருக்கின்றன.
பாஜக அரசு அதே கருணை உணர்வுடன் தமிழகத்திலிருந்து தப்பியோடிவர்களையும் திரும்பவும் தமிழகத்திற்கே வரவழைப்பார்களா?